தந்தைக்கு கம்யூனிஸம், தனயனுக்கு காமெடி

வெள்ளி, 29 நவம்பர் 2013 (12:10 IST)
FILE
நாலு பேரும் ரொம்ப நல்லவங்க படக்குழு அந்தமான் சிறைச்சாலையில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். பெயரிலுள்ள நாலு பேரில் படாவதி ஸ்டார் சீனிவாசனும் ஒருவர்.

சிறை மீண்ட அவரை மீண்டும் கைது செய்வதற்குள் அவசர அவசரமாக அந்தமான் அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர் ஜோ.

கதைப்படி படாவதி ஸ்டார்தான் வில்லன். அவர் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் காட்சியை எடுக்கவே இந்தப் பயணம். கொஞ்ச நாள் முன்பு திஹார் சென்றிருந்தால் நிஜயமாகவே சிறைக் காட்சியை எடுத்திருக்கலாம், தவறவிட்டுவிட்டார்கள்.

இந்தப் படத்தை இயக்கும் ஜோ பாவலர் வரதராஜனின் மகனாம். பாவலர் வரதராஜ் இளையராஜா பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரின் அண்ணன். கம்யூனிஸ்ட். ஆர்மோனியப் பெட்டியுடன் கிராமம் கிராமமாகச் சென்று கம்யூனிஸ கருத்துக்களை பரப்பியவர். அன்றைய கம்யூனிஸ்டும், எழுத்தாளருமான ஜெயகாந்தனின் நண்பர், சக பயணி. இளையராஜாவின் இசை ஆர்வத்துக்கு முதல் காரணமாக அமைந்தவர்.

அவரின் மகன் காமெடியில் நம்பிக்கை வைத்ததில் தப்பில்லை. படாவதி ஸ்டாரை காமெடியராக நினைத்ததுதான்... எப்படிப் பார்த்தாலும் ஜீரணிக்க முடியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்