விமல் ஜோடி ப்‌ரியா ஆனந்த் - கண்ணன் இயக்குகிறார்

வெள்ளி, 29 நவம்பர் 2013 (11:07 IST)
சேட்டை படத்துக்குப் பிறகு சொந்த ஸ்கி‌ரிப்டில் படம் இயக்குகிறார் கண்ணன். பிப்ரவ‌ரியில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கிறார்.
FILE

அவருக்கு ஜோடியாக ப்‌ரியா ஆனந்த் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

்‌ரியா ஆனந்த் இந்தப் படத்தில் மதுரையை சேர்ந்தவராக வருகிறார். வழக்கமாக மதுரை என்றால் ஹீரோயின் படிக்காதவராக இருப்பார். ஆனால் ப்‌ரியா ஆனந்தின் அன்னபூர்ணி கதாபாத்திரம் படித்து பட்டம் வாங்கிய பெண்.

படத்தின் பாதி கதை ரயிலில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் படத்தின் முதல் ஷெட்யூல்டை எடுக்க உள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்