சூர்யா, லிங்குவின் புரொடக்சன் எண் 10 பூஜை படங்கள்

செவ்வாய், 26 நவம்பர் 2013 (17:49 IST)
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்தின் பூஜை மிக எளிமையாக நடந்தது.
FILE

சிங்கத்துக்குப் பிறகு நடிப்பதாக இருந்த கௌதமின் படம் ட்ராப்பாக, லிங்குசாமியின் படத்துக்கு வந்தார் சூர்யா. அதிலும் பிரச்சனை. நான் இயக்குவதாக இருந்த பகலவன் கதையைதான் லிங்குசாமி காப்பியடித்திருக்கிறார் என சீமான் புகார் சொல்ல, அந்தக் கதை கைவிடப்பட்டது.
FILE

புதிய கதையை உருவாக்கி தற்போது படப்பிடிப்பு வரை சென்றிருக்கிறார்கள். மும்பையில் 25 நாள் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்.

மனோ‌ஜ் பா‌ஜ்பாய், வித்யுத் ஜமால் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள். தாடியுடன் இந்தப் படத்தில் சூர்யா தோன்றுகிறார். ரெட் ட்ராகன் என்ற புதிய டி‌ஜிட்டல் கேமராவில் படப்பிடிப்பை ஷூட் செய்கிறார்கள்.
FILE

உலகிலேயே இந்த கேமரா இப்போதுதான் முதல்முதலில் பயன்படுத்தப்படுகிறது, இந்தப் படத்துக்குப் பிறகு ஹாலிவுட் இயக்குனர் ‌ரிட்லி ஸ்காட் இந்த கேமராவை தனது படத்துக்கு பயன்படுத்த உள்ளார் என்றனர். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ‌ரிட்லி ஸ்காட்டின் புதிய படத்தின் தயா‌ரிப்பாளர்கள் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று மறுப்பு தெ‌ரிவித்தது தனிக்கதை.
FILE

படத்துக்கு இன்னும் பெய‌ரிடப்படவில்லை கிளாப் கட்டையிலும் புரொடக்சன் 10 என்றே எழுதப்பட்டிருந்தது.

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE


FILE

FILE


FILE

வெப்துனியாவைப் படிக்கவும்