சகுனியில் ர‌ஜினி, கமல்

வியாழன், 31 மே 2012 (20:39 IST)
ஜூன் 2 சகுனி ஆடியோ. விரைவில் படம் ‌ரிலீஸ். தவணை முறையில் படத்தின் ஹைலைட்களை தரத் தொடங்கியிருக்கிறது சகுனி யூனிட்.

சகுனி முழுக்க அரசியல் படமல்ல. ஆனால் அரசியல் பிரதானமாக வரும் படம். சிறுத்தையில் கார்த்தியுடன் கலந்து கட்டிய சந்தானம் இதிலும் இருக்கிறார். படத்தில் கார்த்தி மகாபாரத கிருஷ்ணன் என்றால் சந்தானம் நாரதர். தங்களுக்கு வரும் பிரச்சனைகளை இவர்கள் எப்படி மற்றவர்களை குழப்பி சால்வ் செய்கிறார்கள் என்பதுதான் கதை.

படத்தில் சந்தானம் கார்த்தியை ர‌ஜினி என்றே அழைக்கிறார். கார்த்தி சந்தானத்தை அழைப்பது கமல். ஓடாத படத்தில் ர‌ஜினி நடித்த சினிமாவை ஒளிபரப்புவது போலதான் இதுவும்.

இரண்டு பே‌ரின் ரசிகர்களும் திரையை கிழிக்காமல் இருந்தால் ச‌ரி.

வெப்துனியாவைப் படிக்கவும்