‌ஜீவாவின் புது வசந்த ஆசை

திங்கள், 2 ஜனவரி 2012 (17:01 IST)
முதல் படம் நடிக்கும் போதே நூறாவது படம் எந்த கான்செப்டில் அமைய வேண்டும் என்று கனவு காண்பவர்களுக்கு மத்தியில் ‌ஜீவாவின் ஆசை ரோஜமதுமிதாவைப் போல் சின்ன ஆசைதான். தனது 25வது படம் ஒரு ‌ரீமேக்காக இருந்தால் நல்லது என்று விரும்புகிறார்.

இவரது அப்பா ஆர்.பி.சௌத்‌ரியின் தயா‌ரிப்பில் வெளியான படம் விக்ரமனின் புது வசந்தம். இந்தப் படம் ‌ஜீவாவின் ஃபேவரைட் படங்களில் ஒன்று. புது வசந்தத்தின் ‌ரீமேக்கில் நடிக்க ஜீவாவுக்கு நெடுநாளாக ஆசை. தனது 25வது படமாக இது இருந்தால் நல்லது என்று எண்ணுகிறார்.

ஆர்யா, ஜெயம் ரவி, சந்தானம் என்று நண்பர்கள் நல்லவிதமாக இருப்பதால் ‌ீமேக் சாத்தியம்தான் என்று அவர் சொல்லும் போது வசந்தம் மீண்டும் வருவதற்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்