விஜய்யை வைத்து கௌதம் படம் இயக்குகிறார் என்ற ஆச்சரிய தகவல் கோடம்பாக்கத்தில் உலவுகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்.
விஜய்யை இயக்கும் ஆசையில் அவருக்கு கதை சொல்லப் போனார் கௌதம். இரண்டு மணி நேரம் கதை கேட்ட விஜய், கௌதம் கிளம்பும் போது சில டிவிடிகளை கையில் கொடுத்து, இது நான் நடித்தப் படங்கள், இது மாதிரி கதை பண்ணுங்க என்றிருக்கிறார். அவை பேரரசு இயக்கிய திருப்பாச்சி மற்றும் சிவகாசி.
யானை வேட்டைக்கு கிளம்பி எலி கிடைத்த மாதிரி நொந்து போனார் கௌதம். இதனை அவர் வெளிப்படையாக தெரிவிக்க பேரரசு சார்பில் கௌதமுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. டிவிடி பார்த்து படம் பண்ணுகிறவர் என்று கௌதமை சாடினார் பேரரசு. கௌதம், விஜய் எப்போதும் இணையவே முடியாது என்றொரு சூழல் உருவானது.
இந்த சண்டையை தாண்டி எப்படி சமாதானமானார்கள் என்பதுதான் ஆச்சரியம். ஜீவாவை வைத்து கௌதம் ஆகஸ்டில் படம் தொடங்குகிறார். அந்தப் படம் முடிந்த பிறகு விஜய்யை இயக்குவார் என நம்பப்படுகிறது.
இந்தத் தகவலை இதுவரை இரு தரப்பும் உறுதி செய்யவில்லை.