நயன்தாராவின் கடைசிப் படம்?

வியாழன், 23 ஜூன் 2011 (16:10 IST)
பிரபுதேவாவுடனான திருமணத்துக்காக நயன்தாரா காத்திருக்கிறார். முறைப்படி பிரபுதேவாவுக்கு விவாகரத்து கிடைப்பதற்காகதான் இந்த காத்திருப்பு.

திருமணத்துக்கு முன் எப்படியோ... திருமணத்துக்குப் பின் முழுமையான குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் நயன்தாரா. முதல் வேலையாக நடிப்புக்கு முழுக்குப் போடப் போகிறார் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த நயன்தாரா புதிய வாய்ப்புகள் எதையும் ஒத்துக் கொள்வதில்லை. தமிழில் இவருக்கு படங்களில்லை. தெலுங்கில் ஒரேயொரு படம், ஸ்ரீராம ஜெயம். இதில் சீதாவாக நடிக்கிறார். தனது இத்தனை நாள் திறமையையும் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறாராம். இந்தப் படத்துடன் தனது நடிப்பு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறாராம்.

பார்ப்போம்... தீர்மானம் எத்தனை நாள் நீடிக்கிறது என்று.

வெப்துனியாவைப் படிக்கவும்