விஜய் பிறந்தநாளையொட்டி எழுந்த மிக முக்கிய செய்தி, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த செய்தியை விஜய் தரப்போ, முருகதாஸ் தரப்போ இன்னும் உறுதி செய்யவில்லை.
ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ முருகதாஸுடன் இணைந்து படம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டது நினைவிருக்கலாம். இந்த கூட்டுத் தயாரிப்பின் முதல் படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. முருகதாஸின் அசோஸியேட் சரவணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
முருகதாஸ், விஜய் இணையும் படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் முதல் காப்பி அடிப்படையில் தயாரிப்பார் என்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ அதனை உலகம் முழுவதும் விநியோகிக்கும் என்றும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்போ மறுப்போ வெளிவரலாம்.