வாலியை ஆச்ச‌ரியப்படுத்திய சினேகன்

வியாழன், 23 ஜூன் 2011 (13:14 IST)
பாடலாசி‌ரியர் சினேகன் ஹீரோவாக அறிமுகமாகும் உயர்திரு 420 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் வாலி.

காலை நேர விழாக்களுக்கு வாலி வரமாட்டாரே என்று பலரும் ஆச்ச‌ரியப்பட்டனர். இதனை தனது பேச்சில் குறிப்பிட்டு விளக்கினார் வாலி. பைபாஸ் சர்ஜ‌ரி செய்த பிறகு காலை நேர விழாக்களுக்கு நான் செல்வதில்லை. ஒன்பது மணிக்கு மாத்திரைகள் சாப்பிடணும். சினேகன் வற்புறுத்தி அழைத்ததால் அதனை‌த் தட்ட முடியாமல் வந்தேன் என்றார்.

படத்தின் ஹீரோயின் மேக்னா சுந்தர் ஆள் பாதி ஆடை பாதியாக வந்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் சினேகனை வாழ்த்திப் பேசினார்.

பா.விஜய் ஹீரோவாக நடித்த போது அனைத்துப் பாடல்களையும் அவரே எழுதினார். ஆனால் சினேகன் உயர்திரு 420ல் வாலியையும், அறிவுமதியையும் பாடல் எழுத வைத்திருக்கிறார். ஆச்ச‌ரியமாக இதனை குறிப்பிட்டுப் பேசினார் வாலி.

வெப்துனியாவைப் படிக்கவும்