பிரபுசாலமன் இயக்கத்தில் பிரபு மகன்

புதன், 22 ஜூன் 2011 (20:44 IST)
சிவா‌‌ஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாகிறார். இவர் அறிமுகமாகும் படத்தை பிரபுசாலமன் இயக்குகிறார்.

மைனா படத்துக்குப் பிறகு நாட்டுக்குள் வந்து அட்டகாசம் செய்யும் யானைகளைப் பற்றிய கதையை படமாக்குவதாக பிரபுசாலமன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்தப் படத்துக்கு அவர் பல வாரங்களாக கதாநாயகன் தேடி வந்தார். யாரும் அவரது மனதுக்கு உகந்தவர்களாக இருக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரவுவைப் பார்த்த பிரபுசாலமன் அவரை தனது படத்தின் ஹீரோவாக்கியிருக்கிறார். விக்ரம் பிரபு அமெ‌ரிக்காவில் சினிமா குறித்துப் படித்தவர். நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவர்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் யானைப் பாகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இதற்காக இவர் கேரளாவில் தற்போது பயிற்சி எடுத்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்