முதலிடத்தில் அவன் இவன்

புதன், 22 ஜூன் 2011 (20:28 IST)
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் பாலாவின் அவன் இவன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கியிருக்கும் அவன் இவனுக்கு தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பாலா படம், விஷால், ஆர்யா என்று இரு ஹீரோக்கள்... சொல்லவா வேண்டும் வரவேற்புக்கு.

படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 89 லட்சங்களை சென்னையில் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இது மூன்றாவது அதிக ஓபனிங் வசூல். முதலில் எந்திரன், ஒரு கோடிக்கும் மேல். இரண்டாவது தசாவதாரம் 95 லட்சங்கள். மூன்றாவது அவன் இவன்... 89 லட்சங்கள்.

சிங்கம், கோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் ஓபனிங்கைவிட இது அதிகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்