மது ஷாலினி - அவன் இவன் அட்ராக்சன்

வெள்ளி, 22 ஏப்ரல் 2011 (17:58 IST)
பாலா படத்தில் நடிப்பது என்பது நூறு படங்களில் நடிப்பது மாதி‌ி. ஆனால் அந்த வாய்ப்பு அ‌வ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது. உதாரணத்துக்கு வேறு எங்கும் போக வேண்டாம். அவன் இவன் மது ஷாலினியே போதும்.

பழனியப்பா கல்லூரியில் நடித்த இவர் தெலுங்கில் சில துக்கடா படங்களில் நடித்தார். இப்போது இவர் பாலாவின் ஹீரோயின். அவன் இவனில் இவர்தான் ஆர்யாவின் ஜோடி. கல்லூரியில் படிக்கும் இவரை சூர்யா காதலிக்கிறாராம்.

மது ஷாலினியை வரவழைத்து பலமுறை நடிக்க வைத்து தனக்கு திருப்தியான பிறகே நடிக்க வாய்ப்பு கொடுத்தாராம் பாலா. அதனால் என்ன, படம் வெளிவந்தால் தமிழின் டாப் ஹீரோயினில் நானும் ஒருத்தி என நம்பிக்கையுடன் இருக்கிறார் மது.

வெப்துனியாவைப் படிக்கவும்