7ஆம் அறிவு - மெகா நடனக்காட்சி

புதன், 23 மார்ச் 2011 (13:23 IST)
உலக சினிமாவில் இதுவரை சொல்லாத கதை என்று சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படப்பிடிப்புக்கே கிளம்பினார் ஏ.ஆர்.முருகதாஸ். சவாலுக்கேற்ப படம் பற்றி வரும் தகவல் ஒவ்வொன்றுமே பிரமிப்பு.

இந்தப் படத்தில் ஆயிரம் நடனக் கலைஞர்களை பயன்படுத்தி பாடல் காட்சி ஒன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறார் முருகதாஸ். கவனிக்க... துணை நடிகர்கள் அல்ல... நடனக் கலைஞர்கள். நடனம் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடனக் கலைஞர்களுக்கு குழு குழுவாக பயிற்சி அளித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்