மங்காத்தாவில் அஞ்சலி

வெள்ளி, 14 ஜனவரி 2011 (19:31 IST)
கோடம்பாக்கத்தில் உள்ள அனேகமாக எல்லோரும் அ‌‌ஜீத்தின் 50வது படத்தில் இருக்கிறார்கள். த்‌ரிஷா, லட்சுமிராய், அர்ஜுன், பிரேம்‌ஜி அமரன், வைபவ்... இந்த கும்பமேளாவில் லேட்டஸ்ட் வரவு, அஞ்சலி.

அஞ்சலி கிளவுட் நைனின் தூங்கா நகரம் படத்தில் நடித்து வருகிறார். அப்போதுதான் மங்காத்தாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மங்காத்தாவை தயா‌ரிப்பதும் கிளவுட் நைன்தான் என்பது முக்கியமானது.

அஞ்சலியுடன் சேர்த்து மங்காத்தா ராணிகளின் எண்ணிக்கை மூன்றாகியிருக்கிறது.

படம் முடியும் வரை நடிகர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பாரோ வெங்கட்பிரபு?

வெப்துனியாவைப் படிக்கவும்