தெலுங்கில் வெளியாகும் சிறுத்தை

புதன், 5 ஜனவரி 2011 (14:36 IST)
தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமார்க்குடு படத்தைதான் தமிழில் சிறுத்தை என்ற பெய‌ரில் எடுத்திருக்கிறார்கள். வரும் பொங்கலுக்கு சிறுத்தை திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தில் போலீஸ் அதிகா‌ரி, பிக்பாக்கெட் என இரு வேடங்களில் நடித்துள்ளார் கார்த்தி. ஜோடி தமன்னா. இது ரொம்ப ஜாலியான படம், மெசே‌ஜ் எல்லாம் எதிர்பார்க்காதீங்க என்றார் கார்த்தி சீ‌ரியஸாக. அவரது ஒரு கேரக்டர் பிக்பாக்கெட் என்பதால்தான் இந்த சீ‌ரியஸ் அட்வைஸ்.

தெலுங்கிலிருந்து ஒரு படத்தை தமிழில் ‌‌ரீமேக் செய்தால் அதனை தெலுங்கில் யாரும் டப் செய்து வெளியிடுவதில்லை. ஆச்ச‌ரியமாக சிறுத்தையை அது எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அதே ஆந்திராவில் தெலுங்கில் வெளியிடுகிறார்கள். இந்த தில் எப்படி வந்தது?

விக்ரமார்க்குடு படத்துக்கும் சிறுத்தைக்கும் சம்பந்தமில்லாத அளவுக்கு காட்சிகளை மாற்றியிருக்கிறார்களாம். அதனால்தான் ைரியமாக தெலுங்கிலும் படத்தை வெளியிடுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்