கமல், த்ரிஷா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி மன்மதன் அம்பு. வழக்கம் போல ஹாலிவுட் படத்திலிருந்து இதன் கதையையும் தழுவியிருக்கிறார் கமல்.
நேற்று வெளியான இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. அத்துடன் ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் யுஎஸ், யுகே உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகியுள்ளது.
எதிர்பார்த்தது போலவே படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன. இது கமலுக்கான ஓபனிங். மன்மதன் அம்பு படத்துக்கு கூட்டம் வருமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.