கமல் ஜோடி அனுஷ்கா?

செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:29 IST)
இளம் ஹீரோக்களின் ஒரே சாய்ஸான அனுஷ்கா கமலின் அடுத்தப் படத்தில் நடிப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

மன்மதன் அம்புக்குப் பிறகு கமல் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அவரோ அல்லது அவரது நெருங்கிய இயக்குனர் நண்பர்களில் யாரேனும் இயக்கக்கூடும் என கமலே தெ‌ரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் கமல் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என நம்பத்தகுந்த செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்