அடுத்தும் காதல் கதைதான்

செவ்வாய், 21 டிசம்பர் 2010 (20:18 IST)
வித்தியாசமான பேக்ட்ராப்பில் மைனாவில் காதலை சொன்ன பிரபுசாலமன் அடுத்தும் காதல் கதையை இயக்குவதாக‌த் தெ‌ரிவித்தார்.

காதல் கதை என்றாலும் மைனாவின் வித்தியாசமான பேக்ட்ராப் அதற்கு வேறொரு கலரை தந்தது. அதேபோல் தனது அடுத்தப் படமும் காதல்தான் என்றாலும் முற்றிலும் வித்தியாசமாக அதாவது மைனாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெ‌ரிவித்தார்.

படத்தில் யார் நடிப்பது என்பதை ஸ்கி‌ரிப்ட் முழுமையடைந்த பிறகே முடிவு செய்யவிருப்பதாகவும் அவர் தெ‌ரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்