பின்னணி பாடகி சொர்ணலதா மரணம்

திங்கள், 13 செப்டம்பர் 2010 (15:25 IST)
பிரபல பின்னணி பாடகி சொர்ணலதா நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 37.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்பட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியவர் சொர்ணலதா. பாலக்காட்டைச் சேர்ந்த இவர் சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

சொர்ணலதா இளையராஜா, தேவா, ஏ.ஆர்ரஹ்மான் உள்பட முன்னணி இயக்குனர்கள் அனைவ‌ரின் இசையிலும் பாடியுள்ளார். ரஹ்மான் இசையில் கருத்தம்மா படத்துக்காக இவர் பாடிய போறாளே பொன்னுதாயி... பாடல் அவருக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

சொர்ணலதாவை பின்னணிப் பாடகியாக தமிழில் அறிமுகப்படுத்தியவர் இளையராஜா. கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா பாடலே அவரது முதல் தமிழ்ப் பாடல்.

வெப்துனியாவைப் படிக்கவும்