டி.ராமநாயுடுக்கு தாதா சாகேப் பால்கே விருது

வெள்ளி, 10 செப்டம்பர் 2010 (15:49 IST)
இந்தியாவில் திரையுலகில் சாதனைப் பு‌ரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உய‌ரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. வருடந்தோறும் இந்த விருதுக்கு‌ரியவர் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

2009 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பிரபல தயா‌ரிப்பாளர் டி.ராமநாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் படங்கள் தயா‌ரித்து கின்னஸ் சாதனை பு‌ரிந்தவராவார்.

ர‌ஜினி, கமல், சிவா‌ஜி போன்ற பெரும் நடிகர்கள் இவரது தயா‌ரிப்பில் நடித்துள்ளனர். வசந்த மாளிகை படத்தையும் இவர்தான் தயா‌ரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதம் கோவாவில் நடக்கும் திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்