ஐஸ்வர்யா ராய் படம் - சுஹாசினி மறுப்பு

வெள்ளி, 9 ஜூலை 2010 (14:05 IST)
ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை சுஹாசினி இயக்குகிறார். இரண்டு நாட்கள் முன்பு இந்த செய்தி ஊடகங்களை கலங்கடித்தது. (நமது ஊடகத்தில் இந்த செய்தி வரவில்லை).

சாத்தியமே இல்லாத விஷயமாயிற்றே என்ற நமது ‌யூகத்தை சுஹாசினியின் மறுப்பு மெய்ப்பித்துள்ளது.

இது குறித்து பேட்டியளித்திருக்கும் சுஹாசினி, ஐஸ்வர்யா ராயை இயக்குவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை, தற்போது படம் இயக்கும் சூழலில் நான் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்