தில்லாலங்கடி – காதலும் காமெடியும்

திங்கள், 28 ஜூன் 2010 (18:02 IST)
ஜெயம் ராஜாவின் ஐந்தாவது தெலுங்கு ‌‌‌ரீமேக் தில்லாலங்கடி. எப்போதும் போல அவரது தம்பி ஜெயம் ரவி ஹீரோ. எப்போதும் போல காமெடியும், காதலும் குடும்ப சென்டிமெண்டும் கலந்த கதை.

ஜெயம் ரவி ஜோடியாக தமன்னா நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரொட‌‌க்சன் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ஷாம் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

காதலர்களுக்குள் எழும் ஈகோ பிரச்சனைதான் படத்தின் பிரதான கதை. தெலுங்கில் கிக் என்ற பெய‌ரில் வெளியான இந்தப் படம் அங்கு மிகப் பெ‌ரிய வெற்றியை பெற்றது. கிக்கில் ஷாம் நடித்த அதே போலீஸ் அதிகா‌ி வேடத்தை தமிழிலும் செய்துள்ளார்.

எனது மற்ற படங்களைப் போல தில்லாலங்கடியும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்றார் ஜெயம் ராஜநம்பிக்கையுடன்.

வெப்துனியாவைப் படிக்கவும்