கமல் பொன்விழா

திங்கள், 28 ஜூன் 2010 (17:38 IST)
கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து ஐம்பது வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டன. ஒரு நடிகர் ஐம்பது வருடங்கள் திரையுலகில் நீடித்திருப்பது என்பதே பெரும் சாதனை. வெற்றிகரமாக நிலைத்திருப்பது என்பது அதைவிட கடினம்.

இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் கமல்ஹாசனை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு கமல்ஹாசனின் கடந்தகால நினைவுகள் என்ற பெய‌ரில் திரைப்பட விழா ஒன்றை டெல்லியில் நடத்துகிறது. ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் இந்த விழாவில் கமலின் புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படும்;.

திரைப்பட விழாவில் அனைவரும் கலந்து கொள்ளலாம், அனுமதி இலவசம்.

வெப்துனியாவைப் படிக்கவும்