ஷங்கரின் அசோசியேட் இயக்குநர் கே.ஆர்.மதிவாணன் தன்னுடைய முதல் படமான அரிது அரிதுவை இயக்கி முடித்துவிட்டார். தீவிரவாதப் பிரச்சனையைக் கையிலெடுத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குநர், புதுமுகங்களே போதுமென்று ஹரீஷ், உத்ராவை அறிமுகம் செய்திருக்கிறார்.
சென்னையில் தொடங்கி ஆஸ்ட்ரேலியாவின் மெல்போர்ன் வரை ஷூட்டிங் செய்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் ஷூட்டிங் போயிருந்தா பின்லேடனைப் ஹீரோ பிடிக்கிற மாதிரி படமெடுத்து தீவிரவாதத்தை ஒழிச்சிருக்கலாம். ஆஸ்ட்ரேலியாவுல என்ன பண்ணியிருப்பார்?