திரைப்படங்களில் தன் கெட்ட ஆட்டத்தின் மூலம் இளசுகளின் நெஞ்சைக் கலங்கடித்த முமைத்கான் திடீரென பாதை மாறத் தொடங்கியிருக்கிறார். பாடலுக்கு ஆடக் கூப்பிடுபவர்களிடமெல்லாம், 'டான்ஸ் பண்றேன், கூடவே படத்துல எனக்கொரு ரோல் கொடுங்க ' என்று கண்டிஷன் போடுகிறார்.
தமிழில் பவுர்ணமி நாகம் படத்தில் ஹீரோயின் வேடம், தியாகராஜனின் மம்பட்டியான் ரீமேக் படத்தில் கரகாட்டாக்காரி ரோல், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் கேரக்டர் ரோல் என அசத்தி வருகிறார். கேரக்டர் ரோலோடு கவர்ச்சிப் பாடல் தருபவர்களுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டப்படும் என வீட்டின் முன் போர்டு வைக்காத குறைதானாம்.