பலே நாயகி

வெள்ளி, 25 ஜூன் 2010 (13:54 IST)
கிட்டத்தட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் மேக்னா சுந்தர். தமிழில் காதல் சொல்ல வந்தேன், கிருஷ்ண லீலை, நந்தா நந்திதா, சிநேகனுடன் ஒரு படம் என அசத்தும் இவர், மலையாளத்தில் யக்ஷியும் ஞானும், கன்னடத்தில் பொல்லாதவன் ரீமேக், தெலுங்கில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

காதல் சொல்ல வந்தேன் படத்தில் வாய்ப்புத் தந்து தன்னைச் சிறப்பாக நடிக்க வைத்ததற்காக இயக்குநர் பூபதி பாண்டியனுக்கு தங்கமோதிரம் பரிசளித்துள்ளார். அடுத்த பட சான்§க்காக மோதிரம் போட்டது பலே காரியம்தான். பார்த்துப் பரிசு கொடுங்க மேடம் அப்புறம் பூபதிபாண்டியன் - மேக்னா ரகசியத் திருமணம்னு நியூஸ் போட்டுறப் போறாங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்