‌ரீமேக்காகும் ஸ்ரீதர் படங்கள்

திங்கள், 17 மே 2010 (17:43 IST)
தமிழில் தடம் பதித்த இயக்குனர்களில் ஒருவர் ஸ்ரீதர். காதலிக்க நேரமில்லை என்ற கலகலப்பான படத்தையும் கொடுப்பார், நெஞ்சில் ஓர் ஆலயம் என்று உருகவும்விடுவார்.

இவரது படங்களை ‌‌ரீமேக் செய்ய கோடம்பாக்கத்தில் பலரும் ஆர்வமாக உள்ளனர்.

காதலிக்க நேரமில்லை படத்தின் ‌‌‌ரீமேக் உ‌ரிமையை மனோபாலா முன்பே வாங்கி வைத்துள்ளார். ‌‌ரீமேக்கை உடனே தொடங்க வேண்டும் என்று அவர் பல காலமாக தலைகீழாக நின்று பார்க்கிறார், ம்ஹும்... அவரால் முடிந்தபாடில்லை.

ஹீரோவாக நடிக்க ஆள் கிடைத்தாலும் பாலையா, நாகேஷ் கேரக்டர்களில் நடிக்க கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் இல்லை.

ஸ்ரீத‌ரின் உத்தரவின்றி உள்ளே வா படத்தை ‌‌ரீமேக் செய்யவும் வேலைகள் நடந்து வருகின்றன. காதலிக்க நேரமில்லை ‌‌ரீமேக் செய்யப்படும் முன் உத்தரவின்றி உள்ளே வா தொடங்கப்பட வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்