அமிதாப் படத்துக்கு இளையராஜா இசை?

திங்கள், 17 மே 2010 (17:40 IST)
அமிதாப்பச்சன் படத்துக்கு இளையராஜஇசையமைப்பது ஒன்றும் புதிதில்லை. பால்கி இயக்கிய சீனிகம், பா படங்களில் அமிதாப்தான் ஹீரோ. இந்த இரு படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.

பா படத்தின் பாடல்களும் இசையும் பாலிவுட்டை கரைத்துவிட்டது. இளையராஜாவுடன் கைகோர்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் மும்பை சென்றுள்ளார் இளையராஜா.

அமிதாப்பச்சன் புதிதாக படம் ஒன்றை தயா‌ரிப்பதாகவும், அதில் இசையமைக்க அவர் இளையராஜாவை கேட்டிருப்பதாகவும், அதற்காகவே இந்த பயணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

மேலும் பால்கியின் அடுத்தப் படத்துக்கும் இளையராஜஇசையமைக்கிறார். இவை தவிர வேறு சில பாலிவுட் வாய்ப்புகளும் இளையராஜாவை தேடி வந்துள்ளதாக தெ‌ரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்