ரஞ்சித் ஜோடி கீர்த்தி சாவ்லா

புதன், 31 மார்ச் 2010 (13:44 IST)
தமிழ்ப்பட இயக்குனர்களில் வித்தியாசமானவர் சஞ்சய் ராம். ஒரு படம் படப்‌பிடிப்பில் இருக்கும் போது நான்கு படங்களுக்கு பூஜை போட்டிருப்பார். அந்தவகையில் இவரை பூஜையின் நாயகன் என்றும் சொல்லலாம்.

தற்போது இரு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் சஞ்சய் ராம். கௌரவர்கள், சுர்லா என்ற அந்தப் படங்கள் முடிவுறும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஞ்சித் நடிப்பில் புதியதொரு படத்தை அறிவித்துள்ளார். படத்தின் பெயர் விலாடபுரம். இந்தப் படத்தில் ரஞ்சித் ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சாவ்லா.

கௌரவர்கள், சுர்லாவுக்கு முன்பு இரு படங்களை சஞ்சய் ராம் தொடங்கினார். சிவமயம், பூவா தலையா என்ற அந்தப் படங்களின் கதி என்ன என்பது தெ‌ரியவில்லை. இந்நிலையில்தான் விலாடபுரம் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்பது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்