நவ‌ம்ப‌‌ர் 6 ஆறு படங்கள்

சனி, 31 அக்டோபர் 2009 (15:01 IST)
பெ‌ரிய பட்ஜெட், பெ‌ரிய ஹீரோ, பெ‌ரிய இயக்குனர்கள் படங்கள் திருவிழா நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும். நேரடித் தமிழ்ப் படங்கள் வாரத்துக்கு இரண்டு மட்டுமே ‌ரிலீஸ் செய்ய வேண்டும். இவை தயா‌ரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்ட விதிமுறைகள். தீபாவளி முதல் இந்த விதிமுறைகள் கறாராக பின்பற்றப்படும் என்றும் அறிவித்தார்கள்.

விதி வலியது. மூன்றே வாரத்தில் விதிமுறைக்கு மூடுவிழா நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது. நவம்பர் ஆறாம் தேதி வெளியாகவிருக்கும் படங்களே இதற்கு சாட்சி.

புதிய விதிமுறைப்படி ஒரு வாரத்தில் இரண்டு நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும். ஆனால், நவ‌ம்ப‌ம் ஆறாம் தேதி மட்டும் ஆறு திரைப்படங்கள் வெளியாகின்றன. அதே நேரம் அதே இடம், சா பூ தி‌ி, வைதேகி, கரகம், தம்பிவுடையான், பாலைவனச்சோலை.

விதிமுறையை திரும்பப் பெற்றுவிட்டார்களா? இல்லை ஆறாம் தேதி மட்டும் விதிமுறைக்கு விடுமுறையா? விடுகதை போட்டவர்கள்தான் விடை சொல்ல வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்