பழசிராஜாவுக்கு வ‌ரி விலக்கு?

வெள்ளி, 30 அக்டோபர் 2009 (19:09 IST)
மலையாளத்தில் பழசிராஜா சூப்பர்ஹிட். ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய மன்ன‌ரின் கதை என்பதால் கேரளாவில் படத்துக்கு ஐம்பது சதவீதம் வ‌ரி விலக்கு அளிக்கப்பட்டது. தமிழிலும் வ‌ரி விலக்கு அளிக்கப்படுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

மலையாளத்தில் படம் வெளியாகும் அதேநாள் தமிழிலும் படத்தை வெளியிட வேண்டும் என்பதுதான் தயா‌ரிப்பாளர்களின் திட்டம். ஆனால், திட்ட‌மி‌ட்டபடி படம் தமிழில் வெளியாகவில்லை. முதலமைச்சருக்கு படத்தை காண்பித்து, வ‌ரி விலக்கு பெற வேண்டும் என்பதற்காகவே தமிழில் படம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு பழசிராஜஸ்பெஷலாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர் வழக்கம்போல படத்தில் நடித்தவர், இயக்கியவர் என அனைவரையும் பாராட்டினார். ச‌ரி, வ‌ரி விலக்கு? தமிழில் பெயர் வைக்கும் மாற்று மொழி திரைப்படத்துக்கு வ‌ரி விலக்கு உண்டா என்பது படம் வெளியாகும் போது தெ‌ரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்