வேட்டைக்காரன் விழாவில் கமல், ர‌ஜினி?

சனி, 12 செப்டம்பர் 2009 (12:32 IST)
வேட்டைக்காரன் விநியோக உ‌ரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த சகல வழிகளையும் யோசித்து வருகின்றனர்.

முதல்கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிர‌ம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ். ர‌ஜினி முதல் ஆடியோ சிடியை வெளியிட கமல் பெற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களது எண்ணம்.

விழாவுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அனேகமாக வரும் பதினான்காம் தேதி ஆடியோ விழா நடத்தப்படலாம் என்கிறார்கள்.

வேட்டைக்காரனில் ரவி என்ற கிராமத்து இளைஞனாக விஜய் நடித்துள்ளார். படத்தில் அரசியல் மணம் கமழும் ப‌ஞ்‌ச் டயலாக்குகளும் பேசியிருக்கிறார். பாடல்களிலும் இந்த அரசியல் அதிரடி இருப்பது கூடுதல் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்