இணையத்தில் வேட்டைக்காரன்

வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (13:51 IST)
யு டியூப் என்றாலே யு டர்ன் அடித்து ஓடுகிறார்கள். விவேக் ஒரு படத்தில் சொல்வாரே, மருதநாயகம் எடுத்தவரைக்கும் இருக்கு, வேணுமா? அந்த காமெடியை யு டியூப் நிஜமாக்கிக் கொண்டிருக்கிறது.

பலத்த பாதுகாப்புடன் நடந்த எந்திரன் படப்பிடிப்பை ஊடுருவி சில காட்சிகளை இணையத்தில் உலவவிட்டார்கள் சில விஷமிகள். வேட்டைக்காரன் பாடலொன்றும் இணையத்தில் வெளியானது.

பாடலை‌க் கேட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அது வேட்டைக்காரன் பாடல் அல்ல என்று தெ‌ளிவுபடுத்தினார். ஆனால் இந்தமுறை நிஜமாகவே விளையாடியிருக்கிறார்கள்.

வேட்டைக்காரனில் விஜய்யின் அறிமுக காட்சி என்ற பெய‌ரில் ஒரு வீடியோ யு டியூபில் வலம் வருகிறது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த வீடியோவில் காவல் நிலையத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இது வேட்டைக்காரன் படத்தின் காட்சிதான் என்று உறுதியாக கூறுகிறார்கள் வீடியோவைப் பார்த்த வேட்டைக்காரன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

சைபர் க்ரைம் விழிப்படைந்தால் மட்டுமே இத்தகைய மோசடிகளை தடுக்க முடியும், தமிழ் சினிமாவை காப்பாற்றவும் இயலும்.

வெப்துனியாவைப் படிக்கவும்