சிம்மக் குரலோனுக்கு சிலை

புதன், 12 ஆகஸ்ட் 2009 (18:28 IST)
நடிகர் திலகம் சிவா‌ஜி கணேசனின் சிலை மதுரையில் திறக்கப்படுகிறது. சிவா‌ஜி ரசிகரான மத்திய அமைச்சர் மு.க.அழகி‌ி சிலையை திறந்து வைக்கிறார்.

சிவா‌ஜிக்கு சென்னையில் சிலை வைத்தபோதே மதுரையில் சிலை வைப்பதற்கான வேலைகளை தொடங்கினார், சென்னை கமலா திரையரங்கு உ‌ரிமையாளர் வி.என்.சிதம்பரம். இவர் சிவா‌ஜியின் தீவிர ரசிகர். அதுமட்டுமின்றி சிவா‌ஜியுடன் நெருக்கமாக பழகியவர், அவரது அன்புக்கு‌ரியவர்.

சிவா‌ஜிக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து அதனை சாதித்தும் இருக்கிறார் சிதம்பரம். சென்னையில் சிலை திறப்பதற்கு முதல்வருக்கு எழுந்த எதிர்ப்பையும், அதை சமாளிக்க அவர் போராட வேண்டியிருந்ததையும் நாமறிவோம். இந்த சிக்கல்கள் ஏதுமின்றி மதுரையில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகி‌ி திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறது, சிவா‌ஜி கணேசன் ரசிகர் மன்றம்.

வெப்துனியாவைப் படிக்கவும்