அசல் புதிய தகவல்கள்

புதன், 25 மார்ச் 2009 (15:54 IST)
பெயர்தான் அசல். படத்தைப் பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் நகல். எது உண்மை எது நகல் என்று அறிந்து கொள்வதற்குள் மேலும் பத்து வதந்திகள் புதிதாக முளைக்கின்றன. அ‌ஜித்தின் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்கும் சிலர் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

அசல் படம் ட்ராப்பாகிவிட்டது என்றுகூட ஸ்டுடியோ வட்டாரத்தில் கிளப்பி விடுகிறார்கள் என்றால் பார்த்து‌க் கொள்ளுங்கள். ச‌ி, படம் குறித்த உண்மை நிலவரம் என்ன?

பொதுவாக போட்டோசெஷனை தவிர்ப்பவர் அ‌ஜித். ஆனால், அசலுக்காக சரணின் வேண்டுகோளை ஏற்று தல போட்டோசெஷனுக்கு சம்மதித்திருக்கிறார். சமீரா ரெட்டியும் இவரும் இடம்பெற்ற போட்டோசெஷன் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது.

படத்திலிருந்து ஹா‌ரிஸ் ஜெயராஜை மாற்றிவிட்டு யுவனை ஒப்பந்தம் செய்ததாக சொல்லப்பட்ட தகவலும் உண்மையில்லை. சரண் தனது ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வா‌ஜிடம்தான் அசலுக்கு இசையமைத்துதர கேட்டிருக்கிறார். காதல்மன்னனில் இணைந்து பணியாற்றத் தொடங்கிய சரணும், பரத்வாஜும் மோதி விளையாடு படத்தில் பி‌ரிந்தனர். மோதி விளையாடு படத்துக்கு கலோனியல் கஸின்ஸ் இசையமைத்துள்ளனர்.

செல்வராகவன் - யுவன், கௌதம் - ஹா‌ரிஸ் போல இதுவும் நிரந்தர‌ப் பி‌ரிவு என்றே பலரும் நினைத்தனர். ஆனால், அது தற்காலிகமானது. பரத்வா‌ஜின் சம்மதத்துடனே மோதி விளையாடு படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார் சரண்.

சரண், அ‌ஜித், பரத்வா‌ஜ் கூட்டணியின் காதல்மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால் அசலுக்கும் அதே கூட்டணி இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது அனைவ‌ரின் விருப்பம். ரசிகர்களின் விருப்பமும் அதுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்