தமிழில் ஒன் மில்லியன் இயர்ஸ் பி.சி.

திங்கள், 2 மார்ச் 2009 (15:42 IST)
பத்து லட்சம் வருடங்களுக்கு முன்பு உலகம் எப்படி இருந்திருக்கும்? கற்பனையே சுவாரசியமாக இருக்கிறதல்லவா? இதையே காட்சிகளாகப் பார்த்தால்... ?

ஹாலிவுட்டில் இந்தக் கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக்கியிருக்கிறார்கள். உபயம் இயக்குனர் டாசோஃப்பி. இவரது இயக்கத்தில் உருவான, ஒன் மில்லியன் இயர்ஸ் பி.சி. திரைப்படம் மில்லியன் வருடங்களுக்கு முன் உலகமும், அதன் உயிரிகளும் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கிறது.

மிகப் பிடிமாண்ட ராட்சஸ விலங்குகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. மனிதர்களும் உண்டு. கிங்காங், அனகோண்டா, காட்சிலா வரிசையில் இந்தப் படமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் என்றார் தமிழ்நாட்டில் படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் சண்முகா பிலிம்ஸ் கே. சுரேஷ்.

ஹாலிவுட் கதைப் படங்களுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு குறைவு என்றாலும், பிரமாண்டமான ஆக்­ஷன் மற்றும் சயின்ஸ் பிக்­ஷன் படங்களுக்கு நல்ல வசூல் தொடர்ந்து கிடைத்து வருகிறது. ஒன் மில்லியன் இயர்ஸ் பி.சி. படமும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்