கலாச்சார விழாவில் கமல், த்ரிஷா இருவரும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் மிலன் 2009 என்ற பெயரில் தேசிய அளவிலான கலாச்சார விழா நடக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். விதவிதமான போட்டிகளும் உண்டு.
வரும் 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவை கமல்ஹாசனுடன் இணைந்து நடிகை த்ரிஷா துவக்கி வைக்கிறார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிவாஜி கணேசன் விருதுகள் வழங்கப்படும். விழாவின் இறுதி நாள் இந்த விருதுகளை பாடகி ஆஷா போன்ஸ்லே வழங்குகிறார்.