லக்ஷ்மி புரொட‌க்சனில் விஷால்

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (15:38 IST)
சிலம்பாட்டம் படத்தை தயா‌ரித்த லக்ஷ்மி புரொட‌க்சன், ஷக்தி ஹீரோவாக நடிக்கும் ஆட்டநாயகன் படத்தை தயா‌ரித்து வருகிறது.

தொடர்ந்து படங்களை‌த் தயா‌ரிக்கும் முடிவில் இருப்பவர்கள் லேட்டஸ்டாக விஷாலின் கால்ஷீட்டை வாங்கியுள்ளனர். தோரணை படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தார் விஷால்.

அவருக்கு ஜோடி த்‌ரிஷஎன்பது வரை முடிவாகியிருந்த நிலையில் அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார். செல்வராகவன் படம் என்றால் இரண்டு வருடங்கள் இழுத்தடிப்பார் என விஷால் நினைப்பதே இந்த விலகலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

செல்வராகவனுக்கு கொடுத்த கால்ஷீட்டை லக்ஷ்மி புரொட‌க்சனுக்கு கொடுத்துள்ளார் விஷால். படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது உறுதியாகவில்லை. அனேகமாக தெலுங்கில் வெளியான சவு‌ரியம் படத்தின் ‌‌ரீமேக்காக இருக்கலாம். சவு‌ரியத்தை இயக்கிய சிவகுமார் தமிழ் ‌ீமேக்கையும் இயக்கக் கூடும் என்பதே இப்போதைய நிலவரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்