தமிழ் சினிமா தன்னை மதிக்காததால் மீண்டும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார், நயன்தாரா.
மலையாளத்தில் அறிமுகமான நயன்தாராவை புகழின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அவரை கோடியில் ஒருவராக உயர்த்தியது தெலுங்கு சினிமா. நம்பர் ஒன் என்ற அசைக்க முடியாத இடத்தில் இருந்த த்ரிஷாவை அதிர வைக்க நயன்தாராவுக்கு உதவியதும் தெலுங்கு சினிமாதான்.
மீண்டும் தெலுங்கில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் நயன். தமிழில் தடை விதித்ததால் ஏற்பட்ட காயமும் இந்த முடிவுக்கு ஒரு காரணம்.
சமீபத்தில் தெலுங்கு படமொன்றுக்கு கால்ஷீட் கொடுத்தார் நயன்தாரா. ரவிதேஜா ஹீரோவாக நடிக்கும் படம் அது. நயன்தாராவும், ரவிதேஜாவும் இணைந்து நடித்த துபாய் சீனு தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. வெற்றிக் கூட்டணி என்பதால் விரும்பி கால்ஷீட் கொடுத்திருக்கிறார் நயன்.
ஆதவனுக்குப் பிறகு தமிழில் நயன்தாரவைப் பார்ப்பது கஷ்டம்தான் என்கிறார்கள் அவரது மனம் அறிந்தவர்கள்.