ராஜகுமாரன் இயக்கி நடிக்கும் திருமதி தமிழில் அவரது திருமதி, தேவயானியும் நடிக்கிறார். இதுவரை நடித்திராத வழக்கறிஞர் வேடம் என்பது தேவயானியே எதிர்பாராத சர்ப்ரைஸ்.
ராஜகுமாரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லா நடித்து வருகிறார். பப்லு, லிவிங்ஸ்டன், சிஸர் மனோகர் ஆகியோரும் படத்தில் உண்டு. இதில் வழக்கறிஞராக நடிக்கிறார் தேவயானி. நேர்மையான துடிப்புள்ள வழக்கறிஞர்.
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் பெயரில் தமிழ் இருப்பதால் தமிழைப் பற்றிய பாடல் ஒன்றும் படத்தில் வருகிறது.
தமிழ் தமிழ்... நாம் வணங்கும் தமிழ் பல தலைமுறை கண்ட தமிழ்...
என்ற அந்தப் பாடலை தவசிமணி என்பவர் எழுதியுள்ளார். ராஜ்குமார் இசையமைத்து அவரே பாடியுள்ளார். தேவயானியின் ராதே பிலிம்ஸ் படத்தை தயாரிக்கிறது.