அமீரின் கணக்குபடி பருத்தி வீரனுக்குப் பிறகு கண்ணபிரான் தொடங்கியிருக்க வேண்டும். இடையில் யோகி நுழைய கண்ணபிரான் தள்ளிப் போனது.
யோகி அதன் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கண்ணபிரான் வேலைகளை தொடங்கியிருக்கிறார் அமீர். ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். பக்தி படம்போல் பெயர் இருந்தாலும் பருத்திவீரன் மாதிரி பக்கா ஆக்சன் படமாம் இது.
மார்ச் மாதம் 9ம் தேதி படத்துக்கு பூஜை போட்டு ஜூனில் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள். இசை யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் சினேகன். பிலிம் பேப்ரிகேடடர்ஸ் மகேந்திர குமார் படத்தை தயாரிக்கிறார்.
ப்ரியாமணிக்கு தேசிய விருது வாங்கித்தந்த இயக்குனர் என்பதால் கண்ணபிரானில் நடிக்க நடிகைகளுக்குள் பெரும் தள்ளுமுள்ளு நடந்து வருகிறது.