கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் நானே என இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடம்பிடிப்பதில்லை. நல்ல கதை யாரிடமிருந்தாலும் ரெட் கார்ப்பெட் வரவேற்புதான்.
கே.எஸ். ரவிக்குமார் எப்போதும் அடுத்தவர் கதையைதான் இயக்குவார். கேட்டால் அடுத்தவர் கதையென்றால் அடித்துத் திருத்த எந்த சங்கடமும் இருக்காது என்பார். உண்மை. சொந்த கதையில் கத்திரிபோட யாருக்கு மனம் வரும்?
அவரது இயக்கத்தில் அஜித் நடித்த வில்லனுக்கு கதை எழுதியவர் யூகிசேது. சூர்யா நடிக்கும் ஆதவனுக்கு ரமேஷ்கண்ணா கதை எழுதியிருக்கிறார்.
சரண் விஷயத்துக்கு வந்தோமென்றால், வசூல் ராஜா தவிர்த்து அனைத்துப் படங்களுக்கும் அவருடைய கதைதான். அடுத்து தயாராக இருக்கும் அசல் படத்துக்கு முதல்முறையாக வேறொருவரின் கதை.
வில்லனுக்கு கதை எழுதிய அதே யூகிசேது. வில்லன் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால் வெற்றி நிச்சயம் என்று அசல் யூனிட்டில் அரசல் புரசலாக நம்பிக்கை. பாஸிட்டிவ்வான நம்பிக்கைதான்.