ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (14:08 IST)
கோல்டன் குளோப் விருதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பாஃப்டா விருதை வென்றிருக்கிறது, ஸ்லம்டாக் மில்லியனர்.

விகாஸ் ஸ்வரூப் எழுதிய Q&A நாவலை தழுவி இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு பி‌ரிவுகளில் ஆஸ்கருக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சினிமாவின் உய‌ரிய விருதான பாஃப்டா விருதையும் இப்படம் தனதாக்கியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்பட மொத்தம் ஏழு பி‌ரிவுகளில் இப்படம் விருது பெற்றிருக்கிறது.

முதலில் கோல்டன் குளோப், பிறகு பாஃப்டா, அடுத்து ரஹ்மானின் கி‌‌ரீடத்தில் இணையப்போகும் இறகு ஆஸ்கர்தான், சந்தேகமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்