பாலா, அமீர் - புதிய கூட்டணி?

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:14 IST)
மாயாவி படத்தை தனது சிஷ்யன் சிங்கம்புலிக்காக தயா‌ரித்த பாலா மீண்டும் படம் தயா‌ரிக்கிறார். இதுவும் சிஷ்யர்களுக்காக‌த்தான்.

இயக்குனராக சோபிக்காத சிங்கம்புலி, நான் கடவுள் படத்தில் பாலாவுடன் பணிபு‌ரிந்தார். இவரைப் போல ஆச்சார்யா படத்தை இயக்கிய ரவியும் நான் கடவுளில் அசிஸ்டெண்டாக வேலை பார்த்தார்.

திறமையான இந்த உதவியாளர்களுக்காக தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் இரு படங்களை தயா‌ரிக்க பாலா திட்டமிட்டுள்ளார். சிறிய மனஸ்தாபத்துக்குப் பிறகு ஒன்றிணைந்திருக்கும் அ‌மீர், பாலா இருவரும் இணைந்து படங்களை தயா‌ரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பேட்டியொன்றில் பாலாவுடன் இணைந்து படங்கள் தயா‌ரிக்க தனது விருப்பத்தை தெ‌ரிவித்திருந்தார் அமீர். அதற்கான காலம் கனிந்து வந்திருப்பதாக அவரைச் சார்ந்தவர்கள் நம்பிக்கை தெ‌ரிவிக்கிறார்கள்.

பி ஸ்டுடியோஸ் தயா‌ரிக்கும் இரு படங்கள் இருவரும் இணைவதற்கான பிள்ளையார் சுழியாகவும் இருக்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்