தனது எக்ஸிக்யூட்டிவ் லுக்கை எக்ஸ்ட்ரா மீசை வளர்த்து தேனி இளந்தாரி லெவலுக்கு மாற்றியிருக்கிறார், அஜித்.
பில்லா, ஏகன் படங்களில் கதையைவிட அஜித்தின் லுக்கும், காஸ்ட்யூமும் பேசப்பட்டது. தல இந்த ஸ்டைலில் வந்தால் போதும் என்று அவரது ரசிகர்களே விரும்பும் அளவுக்கு இருந்தது அவரது தோற்றமும், உடையும்.
ஆனால், அடுத்து நடிக்கும் சரணின் அசலுக்காக விருமாண்டியில் கமல் போட்ட சண்டியர் வேஷத்துக்கு மாறியிருக்கிறார் அஜித். மீசையை வளர்த்து கிருதாவுடன் இணைக்கும் இந்த வேஷத்தில் அசல் சண்டியராகவே மாறியிருக்கிறார்.
வெட்டருவா மீசை அசல் மீதான ஆர்வத்தை தூண்டிவிட்டிருக்கிறது.