பிப். 20 முதல் லாடம்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:50 IST)
கொக்கியில் அனைவரது கவனத்தையும் கொக்கி போட்டு ஈர்த்த பிரபு சாலமனின் புதிய படம், லாடம். புதுமுகம் ஹீரோவாக நடித்திருந்தாலும் லாடத்துக்கு இன்டஸ்ட்‌ரியில் எதிர்பார்ப்பு நிறைய.

16 நாட்களில் நடக்கும் கதையே லாடம். ார்மி ஹீரோயினாக நடித்துள்ளார். பிழைப்புக்காக சென்னை வரும் ஹீரோ தனது வாய் துடுக்கால் பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொள்கிறான். அதிலிருந்து அவன் தனது புத்தியை பயன்படுத்தி எப்படி தப்பிக்கிறான் என்பதை எக்ஸ்ட்ரா விறுவிறுப்புடன் எடுத்திருக்கிறார் பிரபுசாலமன்.

திரைக்கதையின் பலத்தை நம்பி இம்மாதம் 20ம் தேதி திரையரங்குக்கு வருகிறது லாடம். தெலுங்கில் சார்மிக்கு ரசிகர்கள் இருப்பதால் லாட‌ம், 16 டேய்ஸ் என்ற பெய‌ரில் தெலுங்கிலும் வெளியாகிறது.

படத்துக்கு தர‌ண் இசையமைத்துள்ளார். காஸ்மாஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயா‌ரித்திருக்கும் இப்படத்தை ராதிகாவின் ராடன் நிறுவனம் வெளியிடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்