சென்ற மாதம் 26ஆம் தேதி திருநெல்வேலிக்கு கிளம்புவதாக இருந்த ரெட்டச்சுழி யூனிட் இன்னும் சென்னையை விட்டு நகரவில்லை.
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரெட்டச்சுழியை தாமிரா இயக்குகிறார். பாரதிராஜாவும், பாலசந்தரும் இணைந்து நடிப்பதால் படத்துக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
படத்தின் முதல் ஷெட்யூல் நெல்லையில் நடந்தது. இரண்டாவது ஷெட்யூலுக்காக படக்குழு கடந்த 26ஆம் தேதி நெல்லை கிளம்புவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை சென்னையை விட்டு யூனிட் நகரவில்லை.
பாடல் ஒலிப்பதிவு நடந்து வருவதால் இந்த தாமதம் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். அடுத்த வாரம் படக்குழு நெல்லை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.