காலதாமதத்துக்கும் கார்த்திகாவுக்கும் அப்படி என்ன பொருத்தமோ? பூசணிக்காய் உடைக்கப்பட்ட கார்த்திகாவின் பல படங்கள் இன்னும் பெட்டியைவிட்டு வெளிவரவில்லை.
முதலில் எந்தப் படம் வெளிவரும் என்ற தகவலுமில்லை. கரிய விழியில் சோகம் தேக்கி நிற்கும் அவருக்கு சந்தோஷ செய்தியை கொண்டு வந்திருக்கிறது, 365 காதல் கடிதங்கள்.
யுவ கார்த்திக், கார்த்திகா நடித்திருந்த இந்தப் படம் கார்த்திகாவின் பிற படங்கள்போல ரிலீஸுக்கு தடுமாறிக் கொண்டிருந்தது. சாலை மகாதேவனின் விஷன் 21 கிரியேட்டிவ் டீம் ஒர்க் தயாரித்த இந்தப் படம் நடைமுறை சிக்கல்களைக் கடந்து விரைவில் வெள்ளித்திரைக்கு வருகிறது.
பாண்டியன் படத்தை இயக்கியிருக்கிறார். பால்ஜே இசையமைத்துள்ளார். படத்தின் வெற்றிக்கு கருணாஸின் காமெடியை பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.