நகுலின் கந்தக்கோட்டை

புதன், 4 பிப்ரவரி 2009 (14:22 IST)
காதலில் விழுந்தேன் வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்படும் நடிகராகியிருக்கிறார், நகுல். மாசிலாமணி படத்தில் சுனேனாவுடன் நடித்து வருகிறவர், இயக்குனர் சக்திவேலின் கந்தக்கோட்டை படத்திற்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

காதல் பிளஸ் ஆ‌க்ச‌ன் நிறைந்த கந்தக்கோட்டையில் நகுல் ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இவர்களைத் தவிர, சம்பத், சந்தானம், காதல் தண்டபாணி, பொன்வண்ணன், சத்யன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தினா இசையமைக்கிறார். யுகபாரதி, சினேகன், தாமரை பாடல்கள் எழுதுகின்றனர். ESK இண்டர்நேஷனல்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்