அலை படத்தில் இணைந்து நடித்த சிம்பு, த்ரிஷா மீண்டும் ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலம்பாட்டம் படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் எது என்பது இன்னும் முடிவாகவில்லை. சிலம்பாட்டத்துக்குப் பிறகு தொடங்கப்படுவதாக இருந்த, போடா போடி படம் ஏறக்குறைய கைவிடப்படும் நிலையில் உள்ளது. கெட்டவன் படமும் உடனே தொடங்கும் நிலையில் இல்லை.
அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் படம் இயக்க இருக்கும் கௌதம் வாசுதேவ மேனன், அதற்குமுன் தமிழ்ப் படம் ஒன்றை இயக்குகிறார். இதில் சிம்பு நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்படாத தகவல்.
இந்தப் படத்துக்காக த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு மழைக்காலம் படத்துக்கு அவர் அளித்திருக்கும் கால்ஷீட் சிம்பு நடிக்கும் படத்துக்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது.
சிம்பு நடிக்கயிருக்கும் படம் அவரது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.